கோவை காளப்பட்டியில் சிட்ரா - குரும்பபாளையம் சாலை விரிவாக்கம் தொடர்பாக நிலம் கையகப்படுத்த, மக்களிடம் பேச்சுவார்த்தை

கோவை: கோவை விமான நிலையம் சந்திப்பு சிட்ரா முதல் குரும்பபாளையம் வரை சாலை விரிவாக்கத்துக்கு, தேவையான நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக காளப்பட்டியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், தலைமையில் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடைபெற்றது.



கோவை: கோவை விமான நிலையம் சந்திப்பு சிட்ரா முதல் குரும்பபாளையம் வரை சாலை விரிவாக்கத்துக்கு, தேவையான நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக காளப்பட்டியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், தலைமையில் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடைபெற்றது.

கோவையில் இருந்து நீலகிரிக்கு மாற்று வழித்தடம் ஏற்படுத்தும் வகையில் விமான நிலைய சந்திப்பில் இருந்து காளப்பட்டி, குரும்பபாளையம் சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதில் முதல், கட்டமாக விமான நிலையம் சந்திப்பில் இருந்து குரும்பபாளையம் வரையில் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.



தற்போது, 10 மீட்டர் உள்ள சாலை 22 மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், முதல்கட்டமாக காளப்பட்டி, எஸ்.எஸ்.குளம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.



இது தொடர்பாக, சம்மந்தப்பட்ட பொது மக்களிடம், ஆட்சேபணை தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் நேற்று நேரில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், "இச்சாலை, விரிவாக்கம் செய்யப்பட்டால் கோவையில் இருந்து நீலகிரி செல்வதற்கு மாற்று வழிதடமாக அமையும். திருப்பூர், ஈரோடு, சேலம் உள்பட பகுதிகளில் இருந்து நீலகிரிக்கு செல்பவர்கள் நகருக்கு வர வேண்டியதில்லை. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்,’’ என்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...