கோவை: உயர்ந்து வரும் பெரிய வெங்காய விலையை கட்டுப்படுத்த, வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டும், என கோவை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவைக்கு வெளிமாநிலங்களான மகாராஷ்டிர, கார்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 200 டன் பெரிய வெங்காயம் வரத்து வருகிறது. ஆனால், வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, வெங்காயம் வரத்து கோவைக்கு வருவது வெகுவாக குறைந்துள்ளது.
இதனால், பெரிய வெங்காயத்தின் விலை தற்போது கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து, டி.கே மார்க்கெட் அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ‘‘இன்னும் சில நாட்கள் வெங்காயத்தின் விலை உயர்வு நீடிக்க வாய்ப்புள்ளது. எகிப்து, துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டும். இல்லையென்றால், இன்னும் சில நாட்களில் வெங்காயத்தின் விலை உச்சத்திற்கு சென்றுவிடும்."
வெங்காய இறக்குமதி செய்யப்பட்டால், தற்போது விற்பனை செய்து வரும் விலை குறைந்து விடும். அதிகரித்து வரும், வெங்காய விலை காரணமாக, பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர், என்றார்.