கோவை: கோவையில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவோம் என பயந்து வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியில் பிளம்பராக பணியாற்றி வந்தவர் அடைகாப்பான்(29). இவரது மனைவி நாகம்மாள்(25). இத்தம்பதியினர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் கோவை வடவள்ளி பகுதி கஸ்தூரிநாய்க்கன் பாளையத்தியில் குடியேறி உள்ளனர். இவர் பணியாற்றி வந்த நிறுவனத்தில் மர அறுவை இயந்திரத்தை திருடி ஒளித்து வைத்துள்ளார்.
இது குறித்து நிர்வாக தரப்பிற்கு தெரியவர அடைகாப்பானிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, தான் திருடியதை ஒப்பு கொண்ட அவர், இயந்திரத்தை மறைத்து வைத்திருந்த இடத்தையும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நிர்வாகம் தன் மீது காவல் நிலையத்தில் திருட்டு புகார் அளித்து விடுவார்களோ என பயந்த நிலையில் காணப்பட்டுள்ளார். நேற்று மதியம் 12.30 மணியளவில் தனது மனைவி நாகம்மாளிடம் தலைவலி உள்ளதாக கூறி மருந்து வாங்கி வரும்படி கேட்டுள்ளார்.
இந்த நிலையில், மருந்துகளை வாங்கிவிட்டு வீடு திரும்பிய அவரது மனைவி வீட்டின் உட்புறம் தாழிடப்பட்டு இருப்பதை கண்டு அடைகாப்பானை அழைத்துள்ளார். ஆனால், கதவு திறக்கப்படாத காரணத்தால் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அடைக்காப்பான் விட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர், இது குறித்து வடவள்ளி காவல் நிலையத்தில் நாகம்மாள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருட்டு சம்பவத்தில் தான் கைது செய்யப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.