தமிழக அரசின் முயற்சியால் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் - விஷ்ணு பிரபு, யங் இந்தியன் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர்

கோவை: தமிழக அரசின் தீவிர முயற்சியால் கொரோனா வைரஸ் முற்றிலும் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை, என கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனை பயன்பாட்டிற்கென கையுறைகளை வழங்கிய யங் இந்தியன் பவுண்டேஷன், நிர்வாக அறங்காவலர், விஷ்ணு பிரபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



கோவை: தமிழக அரசின் தீவிர முயற்சியால் கொரோனா வைரஸ் முற்றிலும் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை, என கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனை பயன்பாட்டிற்கென கையுறைகளை வழங்கிய யங் இந்தியன் பவுண்டேஷன், நிர்வாக அறங்காவலர், விஷ்ணு பிரபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனோ வைரஸ் பரவாமல் தடுக்க, மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், தன்னார்வலர்களும், அரசுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான உதவிகளை வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவை யங் இந்தியன் பவுண்டேசன் சார்பாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக, பணிபுரியும் வகையில் இலவச கையுறைகள் வழங்கப்பட்டது.



இதற்கான நிகழ்ச்சியில், இந்தியன் பவுண்டேசன் நிர்வாக அறங்காவலர் விஷ்ணு பிரபு இ.எஸ்.ஐ மருத்துவமனையின், டீன் டாக்டர் நிர்மலாவிடம் வழங்கினார்.



அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய விஷ்ணு பிரபு, தற்போது தமிழகத்தில் சுகாதாரத்துறை உள்ளாட்சித் துறை மற்றும் மருத்துவர்கள் என அனைவரின் கூட்டு முயற்சியால் தமிழகத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், மேலும் கோவையில் ஆரம்பத்தில் அதிகரித்து வந்த நோய் தாக்கம், பல்வேறு துறையினரின் கூட்டு முயற்சியால் தற்போது மிகவும் குறைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இந்த வருட இறுதிக்குள், தமிழக அரசின் தீவிர முயற்சியால் கொரோனா வைரஸ் முற்றிலும் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் யங் இந்தியன் பவுண்டேசன் தாளாளர், கார்த்திகேயன், நிர்வாக உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...