கோவை: கோவையில் நாய் கடிக்க வருவதை தட்டி கேட்டவரை கறி வெட்டும் கத்தியால் தலையில் வெட்டிய 16 வயது சிறுவனை கைது செய்த போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
கோவை: கோவையில் நாய் கடிக்க வருவதை தட்டி கேட்டவரை கறி வெட்டும் கத்தியால் தலையில் வெட்டிய 16 வயது சிறுவனை கைது செய்த போலீசார் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.
கோவை அடுத்த ஆலாந்துரை பகுதியில் ஜனார்த்தன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கோழி கறிக்கடை நடத்தி வரும் ஜனாத்தனின் வீட்டின் அருகில் வசித்து வரும் உறவினர் ஒருவர் வளர்த்து வரும் நாய் ஜனார்த்தனின் குடும்பத்தை அச்சுறுத்தும் வகையில் கடிக்க வந்துள்ளது.
இதுதொடர்பாக ஜனார்த்தனன் தனது உறவினரிடம் கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தனது தந்தையை ஜனார்த்தனன் எதிர்த்துப் பேசுவதை பார்த்த 16 வயது சிறுவன் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அருகில் இருந்த கறி வெட்டும் கத்தியை எடுத்து ஜனார்த்தனன் தலையில் வெட்டினார்.
இதில் பலத்த காயம் ஏற்பட்டு ஜனார்த்தனன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் ஜனார்த்தனனை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆலாந்துறை போலீசார் 16 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும், சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் கோவை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.