கோவை: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை தொடர்பாக உத்திர பிரதேச மாநில அரசை கலைக்க கோரி கோவை சிவானந்தா காலணி பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை தொடர்பாக உத்திர பிரதேச மாநில அரசை கலைக்க கோரி கோவை சிவானந்தா காலணி பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, உத்திர பிரதேச மாநில அரசை கலைக்க கோரி கோவை சிவானந்தா காலணி பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.