கோவையில் தட்டி கிளப்பிய மழை : மேம்பாலங்கள் கீழ் தேங்கிய தண்ணீர் மக்கள் பாதிப்பு

கோவை: கோவை மாநகரில் திடீர் என பெய்த கனமழை காரணமாக மேம்பாலங்கள் கீழ் பகுதிகள் மற்றும் ரயில்வே பாலங்களில் மழை நீர் சாக்கடை நீருடன் தேங்கி நின்றது.



கோவை: கோவை மாநகரில் திடீர் என பெய்த கனமழை காரணமாக மேம்பாலங்கள் கீழ் பகுதிகள் மற்றும் ரயில்வே பாலங்களில் மழை நீர் சாக்கடை நீருடன் தேங்கி நின்றது. 



கோவை காந்திபுரம், டவுன்ஹால், உக்கடம், வடகோவை, ஆலந்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று மதியம் சுமார் அரை மணி  நேரமாக  கனமழை பெய்தது.  



இதில் கோவை ரயில்நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் ரயில்வே பாலத்தில் மழை நீர்சூழ்ந்தது. இந்த நீருடன் சாக்கடை நீரும் கலந்ததால் சுமார் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. அதே போல் அவினாசி மேம்பாலம் கீழ் பகுதி, கிக்கானி ரயில்வே பாலம், காட்டூர் ரயில்வே பாலம், வடகோவை மேம்பாலம் கீழ் பகுதி என பல இடங்களிலும் மழை நீர் தேங்கி நின்றது. 



இதனால் வாகன ஒட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர். மாநகரின் அவினாசி மேம்பாலம், வடகோவை மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...