பழங்குடி கிராம மக்களுக்கு, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களில் இருந்து காப்பாற்றி கொள்வது, குறித்து பொள்ளாச்சி தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம்

கோவை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி அருகே உள்ள பழங்குடி கிராம மக்களுக்கு, வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் இருந்து காப்பாற்றி கொள்வது, குறித்து தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம் அளித்தனர்.


கோவை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி அருகே உள்ள பழங்குடி கிராம மக்களுக்கு, வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் இருந்து காப்பாற்றி கொள்வது, குறித்து தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம் அளித்தனர்.

பொள்ளாச்சி அடுத்த நாகரூத்து பழங்குடியின கிராமத்தில் கடந்த ஆண்டு பருவ மழைக்காலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30 க்கும் மேற்பட்ட வீடுகள் சேற்றில் புதைந்தன. அச்சம்பவத்தில், பெண் குழந்தை ஒன்றும் உயிரிழந்தது.



இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால், பொள்ளாச்சி தீயணைப்பு துறை சார்பில் நேற்று நாகரூத்து கிராமத்தில், பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அங்குள்ள, ஊட்டுக்கால்வாய் தீயணைப்பு துறையினர் நீரில் அடித்து செல்பவர்களை மீட்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில், 8 தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழுவினர், வனத்துறையினர், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர். இது குறித்து, பொள்ளாச்சி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் புருசோத்தமன் கூறும்போது, "பேரிடர் காலங்களில் பொதுமக்கள் எதிர்பாராத விதமாக ஏற்படும் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் இருந்து தங்களிடம் உள்ள காலி பிளாஸ்டிக் கேன், தெர்மாகோல், லாரி டியூப், ஆகியவற்றை கொண்டு வெள்ளத்தில் இருந்து தப்பிப்பது குறித்து மலைவாழ் மக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது."



மேலும், இங்கு வசிக்கும் 20 மலைவாழ் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் குழுவுக்கு மீட்பு பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பேரிடர் காலங்களில் பொள்ளாச்சியிலிருந்து இருந்து தீயணைப்பு துறையினர் வந்து மீட்பு பணியில் ஈடுபடுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க முடியும் என்றார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...