பொள்ளாச்சி அருகே குடியிருப்புப் பகுதிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மலைவாழ் மக்கள் மனு

கோவை: பொள்ளாச்சி அருகே நெல்லித்துறை - மன்னம் மலைவாழ் மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மலைவாழ் மக்கள், இன்று மனு அளித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே நெல்லித்துறை - மன்னம் மலைவாழ் மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மலைவாழ் மக்கள், இன்று மனு அளித்தனர்.



பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை நெல்லித்துறை - மன்னம் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாரம்பரியமாக வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இதுவரை குடிநீர் வசதி ஏற்படுத்தி தராததால், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அந்த நீரையே குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.

சுகாதாரமற்ற நீரை குடிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாகவும், தண்ணீர் மாசு அடைந்து வருவதால் சமைக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, என அம்மக்கள் தெரிவித்தனர்.

மேலும், குடிநீருக்காக மூன்று கிலோமீட்டர் சென்று ஆழியாறு ஆற்றங்கரையில் உள்ள நீரை கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்று மலைவாழ் மக்கள் தெரிவித்தனர்.

இனியாவது, தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் வைத்தியநாதனை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...