திருப்பூரில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சத்தான உணவுகளை உட்கொள்ளும் செயல்பாடுகள் குறித்த நிகழ்வு!

திருப்பூர்: திருப்பூரில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெற்ற சத்தான மற்றும் சரியான உணவுகளை உட்கொள்ளும் செயல்பாடுகள் குறித்த நிகழ்வை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூரில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெற்ற சத்தான மற்றும் சரியான உணவுகளை உட்கொள்ளும் செயல்பாடுகள் குறித்த நிகழ்வை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் நாடு முழுவதும் நடைபெறும் நிகழ்வின் ஒரு பகுதியாக, திருப்பூரில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், நாம் உண்ணும் உணவு சத்தானதாகவும் மற்றும் உடலுக்கு நன்மை தரக்கூடியவைதாக இருத்தல் மிகவும் அவசியம். சரியான நேரத்தில் சரியான உணவினை உட்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் போன்ற தற்போதைய சூழ்நிலையில் நோய் எதிர்ப்பு சத்தியினை அதிகரிக்கும் வகையில், உணவை உட்கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மேலும் சத்தான, சரிவிகித மற்றும் தரமான உணவு பற்றிய விழிப்புணர்வினை பொதுமக்களிடையே கொண்டு சேர்ப்பது, நம் அனைவரின் கடமை என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், நிகழ்வில் பாரம்பரிய அரிசி ரகங்கள் வகைப்படுத்தி பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.



அதேபோல், சிறு தானியங்களால் செய்யப்பட்ட உணவு வகைகள், உடலுக்கு எப்படி நன்மை பயக்கும் என்பதும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.



இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.

மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, நுகர்வோர் அமைப்பினர், உணவக உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.06.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...