திருமூர்த்தி மலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதியதாக சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க மாவட்ட சுற்றுலா அதிகாரி ஆய்வு!

திருப்பூர்: திருமூர்த்தி மலையில் சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் வகையில் நீச்சல் குளம் பகுதியின் அருகே சுற்றுலா துறையின் சார்பாக புதியதாக சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க மாவட்ட சுற்றுலா அதிகாரி அரவிந்த் குமார் தலைமையில் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


திருப்பூர்: திருமூர்த்தி மலையில் சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் வகையில் நீச்சல் குளம் பகுதியின் அருகே சுற்றுலா துறையின் சார்பாக புதியதாக சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க மாவட்ட சுற்றுலா அதிகாரி அரவிந்த் குமார் தலைமையில் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் திருமூர்த்தி மலை அமைந்துள்ளது. மலைமேல் 960 மீட்டர் உயரத்தில் மூலிகை குணம் நிறைந்த பஞ்சலிங்கம் அருவி அமைந்துள்ளது.

மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில் சிவன் விஷ்ணு பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் அடங்கிய திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்திமலை அணை பூங்கா, படகு இல்லம், நீச்சல் குளம், வண்ணமீன் காட்சியகம், விளையாட்டுப் பூங்கா என பல்வேறு அம்சங்கள் உள்ளன.

இந்நிலையில், சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் வகையில் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் ஏற்கனவே உள்ள நீச்சல் குளம் பகுதியின் அருகே சுற்றுலா துறையின் சார்பாக புதியதாக சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க மாவட்ட சுற்றுலா அதிகாரி அரவிந்த் குமார் தலைமையில் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திருமூர்த்திமலை நீச்சல் குளம் பகுதிக்கு விடுமுறை நாட்களிலும் சாதாரண நாட்களிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.



இந்த நிலையில், இதற்கு அருகே இரண்டு ஏக்கர் நிலத்தில் புதியதாக சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க ஊரக வளர்ச்சித்துறை விருப்பம் தெரிவித்திருந்தது. எனவே அந்த இடத்தில் புதியதாக சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.



இந்த ஆய்வின் போது, மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர்கள் செல்வராஜ், சதீஷ்குமார் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் சிரில் ரூபஸ், ஜவஹர் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...