கோவை: கோவையில் நள்ளிரவில் வீடு புகுந்து திருடிய நபருக்கு தர்ம அடி கொடுத்து போலீசிடம் பொதுமக்கள் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் அருகே உள்ள கள்ளப்பாளையம் கற்பக விநாயகர் வீதியில் வசித்து வருபவர் கோகுல்(40). இவர் அதே பகுதியில் கால்நடை தீவனம் தயாரிக்கும் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கோகுல் பணி முடித்து வீடு திரும்ப நேரம் ஆகும் என்பதால் அவரது மனைவி வீட்டின் முன்கதவை தாழ் இடாமல் வெறுமனே சாத்திவிட்டு குழந்தையுடன் தூங்கச் சென்றுள்ளார். நேற்று மதியம் மூன்று மணியளவில் பணிக்கு சென்ற கோகுல் இரவு 10 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்த நிலையில் உள்ளே சென்று பார்த்தபோது அவரது மனைவி ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை கண்டார். இப்படி இருக்க பீரோவை யாரோ திறக்க முயற்சி செய்யும் சத்தம் கேட்டு வீட்டினுள் உள்ள பீரோ வைக்கப்பட்டு இருந்த அறைக்கு சென்று பார்த்த போது, மர்ம நபர் ஒருவர் உள்ளிருக்கும் பொருட்களை திருட முயற்சி செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கோகுல் சத்தமிடாமல் சென்று அந்த மர்ம நபரை பிடித்து திருடன் திருடன் என சத்தம் போட்டுள்ளார்.
இதையடுத்து, இவரது சத்தம் கேட்டு எழுந்த அவரது மனைவி மற்றும் அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்தனர். உள்ளே திருடனை கையும் களவுமாக பிடித்து உள்ளதை பார்த்தவர்கள் தர்ம அடி கொடுத்து உள்ளனர்.
பின்னர், இது குறித்து சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் வீட்டில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபரை விசாரணை மேற்கொண்ட போது, அவரது பெயர் நந்தகோபால் என்றும் காங்கேயம் பகுதி சேர்ந்தவர் எனவும் கூறி உள்ளார்.
மேலும், கேரளாவிலிருந்து மக்காச்சோளம் ஏற்றிக்கொண்டு அப்பகுதியில் இருக்கும் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளார். லோடு இருக்க கால தாமதமான நேரத்தில் கோகுல் வீடு சாத்தப்படாமல் இருப்பது தெரிந்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
அப்போது கையும் களவுமாக எதிர்பாராத விதமாக சிக்கி கொண்டு உள்ளார். இவர் ஓட்டி வந்த லாரியை போலீசார் சோதனையிட்டபோது பதிவு எண் அழிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் போலீசார் சந்தேகத்தின் பேரில் லாரியை பறிமுதல் செய்ததுடன் நந்தகோபாலை விசாரணை செய்து வருகின்றனர்.
தாளிடப்படாமல் இருந்த வீட்டிற்குள் நுழைந்து திருட முயன்ற நபர் வசமாக மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.