கோவை: கோவையில் மாடி தோட்டத்துக்கு மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.5.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வீட்டுக்கொரு காய்கறி தோட்டம், அமைக்க வேண்டும் என்பதற்காக மாடித் தோட்டம் அமைக்கும் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. இதன் கீழ், மாடித் தோட்டம் அமைக்கத் தேவையான பொருள்கள் மானியத்தில் வழங்கப்பட்டன.
இந்நிலையில், மாடித் தோட்டத்துக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க மானிய திட்டத்தை தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது. இதில், கோவை மாவட்டத்துக்கு ரூ.5.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதனை விருப்பமுள்ளவர்கள் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாடித் தோட்டத்துக்கு சென்சார் மற்றும் சென்சார் இல்லாமல் என இரண்டு முறைகளில் சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம். இதில், சென்சாருடன் தானாக இயங்கிகொள்ளும் வகையில் அமைக்க ரூ.4 ஆயிரம் வரை செலவாகும். இதில் 40 சதவீதமாக ரூ.1,600 மானியம் வழங்கப்படுகிறது", என்றார்.
மேலும், சென்சார் இல்லாமல் அமைக்க ரூ.1000 செலவாகும். இதில் 40 சதவீதமாக ரூ.400 மானியம் வழங்கப்படுகிறது. சென்சாருடன் கூடிய சொட்டுநீர் பாசனம் அமைக்க 50 எண்களும், சென்சார் இல்லாமல் அமைக்க 1,100 எண்களும் இலக்கு நிரணயிக்கப்பட்டுள்ளது. இதில் சென்சாருடன் அமைக்க ரூ.80 ஆயிரம், சென்சார் இல்லாமல் அமைக்க ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் சேர்த்து மொத்தமாக ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.