கோவையில் சீர்மிகு நகர திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.24.36 கோடி மதிப்பீட்டில்‌ மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகளை மாநகராட்சி ஆணைய‌ர் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சியில்‌ சீர்மிகு நகர திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.24.36 கோடி மதிப்பீட்டில்‌ ஆர்‌.எஸ்‌.புரத்தில்‌ மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ சீர்மிகு நகர திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.24.36 கோடி மதிப்பீட்டில்‌ ஆர்‌.எஸ்‌.புரத்தில்‌ மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சியில்‌ சீர்மிகு நகர திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.24.36 கோடி மதிப்பீட்டில்‌ மேற்கு மண்டலம்‌ ஆர்‌.எஸ்‌.புரம்‌ திவான்‌ பகதூர்‌ சாலையில்‌ சுக்ரவார்பேட்டை ரோடு சந்திப்பு முதல்‌ கெளலிபிரவுன்‌ ரோடு வரை மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகள்‌ தற்போது முழுவீச்சுடன்‌ நடைபெற்று வருகிறது. இப்பணிகளை இன்று திவான்பகதூர்‌ சாலையில்‌ மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர், சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும்‌ பணிகளான சாலை அமைக்கும்‌ பணிகள்‌, பாதாள சாக்கடை குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌, மின்சார புதைவடம்‌, கேபிள்கள்‌, 24X7 குடிநீர் குழாய்‌ பதிக்கும்‌ பணிகள்‌, தொலைதொடர்பு கேபிள் அமைத்தல்‌, மழைநீர் வடிகால்‌ அமைக்கும்‌ பணிகள்‌, இருபுறமும்‌ பாதசாரிகள் நடைபாதைகள்‌, அலங்கார தெருவிளக்குகள்‌ அமைக்கும்‌ பணிகள்‌, ஒளிரும்‌ விளம்பர பலகைகள்‌ அமைக்கும்‌ பணிகள்‌ ஆகிய பணிகளை மாநகராட்சி ஆணைய‌ர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனையடுத்து, சாலை ஓரங்களில்‌ இருபுறங்களிலும்‌ கடைகளின்‌ முன்பு சாக்கடை கழிவுநீர் செல்லும்‌ கால்வாய்களில்‌ நீர்தேங்காமலும்‌ மற்றும்‌ கொசு உற்பத்தியை தடுக்கும்‌ வகையில்‌ கொசு மருந்துகளை தெளிக்கப்பட வேண்டும்‌ என சுகாதார அலுவலர்களிடம்‌ தெரிவித்தத ஆணையாளர்‌ அவர்கள்‌, இப்பணிகளை பொது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம்‌ பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும்‌, சீர்மிகு நகர பணிகளை விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.



அதனைத்‌ தொடர்ந்து, கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌, 20-வது வார்டுக்குட்பட்ட சீரநாயக்கன் பாளையத்திலுள்ள தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யக்கூடிய மையத்தை மாநகராட்சி ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, மாநகர பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, மேற்கு மண்டல உதவி ஆணையாளார்‌ அ.ஜெ.செந்தில்‌ அரசன்‌, செயற்பொறியாளர்‌ ஸ்மார்ட்சிட்டி திட்டம்‌ சரவணக்குமார்‌, உதவிப்பொறியாளா்‌ கமலக்கண்ணன்‌, குடிநீர் பிரிவு இளம் பொறியாளர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....