கோவை: கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திய நிலையில், 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் உட்பட நாமக்கல், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், திருவண்ணாமலை, கடலூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 11 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று இரவு அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் நடந்த சோதனையைத் தொடர்ந்து ஒரு துணை தாசில்தார், 2 வருவாய் ஆய்வாளர்கள், 1 சர்வேயர், 1 விஏஒ, 1 உதவியாளர், 1 பதிவு எழுத்தர் என 7 அரசு ஊழியர்கள், 1 புரோக்கர், தன்னிச்சையாக இவர்கள் வேலைக்கு வைத்த 2 பேர் என 3 தனிநபர்கள் உட்பட 10 பேர் மீது கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.