அதிமுக கட்சியின் 49ம் ஆண்டு தொடக்க விழா: கோவை அவினாசி சாலையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை!

கோவை: அதிமுக கட்சியின் 49ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


கோவை: அதிமுக கட்சியின் 49ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



அதிமுக கட்சியின் 49ம் ஆண்டு தொடக்க விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான எடப்பாடி சிலுவம்பாளையம் கிராமத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.



இதன் ஒரு பகுதியாக, அதிமுக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் தலைமையில் கட்சியினர் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்றவர்கள் அவினாசி சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



பின்னர், அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர் ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இதன் பின்னர் கட்சி கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மேயர்கள் செ.ம.வேலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...