கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் ஹரிதா (15). இவர் சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை டியூசன் செல்வதாக கூறிச்சென்ற ஹரிதா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து, ஹரிதாவின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. இது குறித்து சங்கர் நேற்று மாலை, போத்தனூர் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.