நீலகிரியில் இன்று புதிதாக 93 பேருக்கு கொரோன தொற்று..! மொத்த பாதிப்பு 5,915 ஆக உயர்வு!

நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 93 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 93 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்றுடைய நபர்கள் வெளியே சென்று வருவதால் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று மேலும் 93 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நீலகிரியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,915 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து, தொற்று உறுதியாகியுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் இன்று 102 பேர் நோய் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 5,197 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 685 பேர் மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல, நீலகிரியில் கொரோனா தொற்று சிகிச்சை பலனின்றி இன்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். நீலகிரியில் இதுவரை கொரோனாவுக்கு 33 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....