நீலகிரி: உதகை ஏடிசியில் கார் பார்க்கிங் பகுதியில் நீண்டகாலமாக நின்றிருந்த ஜீப்பில் தலையில் பலத்த காயத்துடன் இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து உதகை காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உதகை ஏடிசியில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் நீண்ட காலமாக நின்றிருந்த வாகனத்திலிருந்து துர்நாற்றம் வந்ததைத் தொடர்ந்து அங்குள்ள மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கு நின்றிருந்த ஜீப்பை திறந்து பார்த்தபோது அதில் இறந்த நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதற்கட்ட விசாரணையில் இவர் உதகை காந்தள் பகுதியைச் சேர்ந்த சிவா என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, கைப்பற்றிய சடலத்தில் தலையில் அடிபட்டுள்ள நிலையில், இவர் எப்படி இங்கு வந்தார், எப்படி இறந்தார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.