கோவையில் ஊரடங்கு காலத்தில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு ரூ.5.50 கோடி ரயில் கட்டண தொகை திரும்ப வழங்கப்பட்டுள்ளது

கோவை: ஊரடங்கு காலத்தில் ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு, கோவை, வடகோவை, போத்தனூர், மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களில் இருந்து ரூ.5.50 கோடி முன்பதிவுப் பயணச்சீட்டுக் கட்டணத் தொகை திருப்பி வழங்கப்பட்டுள்ளது, என ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை: ஊரடங்கு காலத்தில் ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு, கோவை, வடகோவை, போத்தனூர், மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களில் இருந்து ரூ.5.50 கோடி முன்பதிவுப் பயணச்சீட்டுக் கட்டணத் தொகை திருப்பி வழங்கப்பட்டுள்ளது, என ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டது. இதனிடையே, ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த பயணிகளில், இ-டிக்கெட் பெற்றவர்கள் கட்டண தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் ரயில்வே நிர்வாகம் திருப்பி செலுத்தியது. 

ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலமாக மார்ச் 22ம் தேதிக்குப் பிறகு ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு, அந்தந்த மையங்களிலேயே கடந்த ஜூன் 4ம் தேதி முதல் முன்பதிவு பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டு, அதற்குண்டான கட்டணங்கள் திருப்பித் தரப்பட்டு வருகின்றன.

இது குறித்து, கோவை ரயில்நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை, வடகோவை, மேட்டுப்பாளையம், போத்தனூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கடந்த ஜுன் 4ம் தேதி முதல் முன்பதிவுக் கட்டணத் தொகை திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூன் 4ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்களில், இதுவரை கோவை ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கட்டணத் தொகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. வடகோவை, மேட்டுப்பாளையம், போத்தனூரில் ரூ.1.50 கோடி கட்டணத்தொகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மொத்தமாக கோவைப் பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் ரூ.5.50 கோடி முன்பதிவுப் பதிவுச் சீட்டுக் கட்டணத் தொகை திருப்பி வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....