பொள்ளாச்சியில் பைனான்சியரை கடத்தி சென்று, கத்தியை காட்டி, ரூபாய் 1 கோடி கேட்டு மிரட்டிய முன்னாள் திமுக நகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேர் கைது..!

கோவை: பொள்ளாச்சியில் பைனான்சியரை காரில் கடத்தி சென்று, கத்தியை காட்டி ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய முன்னாள் நகராட்சி திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவான இரண்டு பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சியில் பைனான்சியரை காரில் கடத்தி சென்று, கத்தியை காட்டி ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய முன்னாள் நகராட்சி திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவான இரண்டு பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

பொள்ளாச்சி கோட்டூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார் (40), இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் செய்து தரும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி மதியம் பொள்ளாச்சி கடைவீதி பகுதிக்கு வந்த சாந்தகுமார், சொந்த வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, கோட்டூர் ரோடு பாலத்தில் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே காரில் வந்தவர்கள், சாந்தகுமாரை தாக்கி காரில் ஏற்றி, கண் மற்றும் கை கால்களை கட்டி தாமரைக் குளம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்திற்கு கடத்திச் சென்றுள்ளனர். மேலும், கத்தியைக் காட்டி, ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதில், சாந்தகுமார் பணம் தர மறுத்ததால் அவரை தாக்கிய கடத்தல்காரர்கள், சென்றான்பாளையம் பகுதியில் உள்ள சாலையோரத்தில்

சாந்தகுமாரை தள்ளிவிட்டு சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்து தப்பித்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட, சாந்தகுமார் நேற்று காலை பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், சம்பவம் குறித்து புகார் அளித்தார்.

பொள்ளாச்சி நகராட்சியின் முன்னாள் திமுக கவுன்சிலர் கமலக்கண்ணன் உட்பட ஆறு பேர் தன்னை காரில் கடத்திச்சென்று கத்தியை காட்டி ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக புகாரில் தெரிவித்திருந்தார்.

அவரது, புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து சாந்தகுமாரை கடத்தியவர்களை தேடிவந்தனர். இந்நிலையில், இன்று மதியம் பொள்ளாச்சி அருகே உள்ள மோதிராபுரம் பகுதியில் சாந்தகுமாரை கடத்திய கமலக்கண்ணன் உள்ளிட்ட 4 பேர் கார் மற்றும் இரு சக்கர வாகனத்துடன் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.



இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற தனிப்படை போலீசார், பதுங்கி இருந்தவர்களில், கமலக்கண்ணன் உட்பட 4 பேரை கைது செய்து, கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.



இதைத்தொடர்ந்து, இந்த கடத்தலுக்கு முதன்மையாக செயல்பட்ட திமுக நிர்வாகி கமலக்கண்ணன் (51), பொள்ளாச்சி காமாட்சி நகர் பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் (27), கண்ணப்பன் நகரைச் சேர்ந்த ஸ்டாலின் (30), காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் (26) உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ஆனைமலை பகுதியை சேர்ந்த பாலாஜி மற்றும் சதீஷ் என்பவர்கள் தலைமறைவாக உள்ளதால், தனிப்படை போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....