கோவை: கோவை சிறுதுளி அமைப்பு சார்பில் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவாக சிறுதுளி வளாகத்தில் 74 மரங்கள் நடும் விழா நடைபெற்றது.

SPB என எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட S.P. பாலசுப்ரமணியம் அவர்கள் தனது இனிமையான இசையின் மூலம் பல தலைமுறைகளை கடந்து இசை ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். அவரது வாழ்க்கையை ரசிகர்கள் கொண்டாடும் விதமாகவும் தங்களது வாழ்க்கையில் ஒரு தென்றலாக திகழ்ந்த அவரை போற்றும் விதமாகவும், அக்டோபர் 15ம் தேதி கோவையில் சிறுதுளி வளாகத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது. இந்நாளானது டாக்டர் கலாமின் பிறந்த நாளாகவும் அமைந்தது தனிச்சிறப்பு.
சிறுதுளி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி அதன் வழிகாட்டியாகவும் ஆசானுமாகவும் திகழ்ந்த டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை மரம் நட்டு நினைவு கூறுவது வழக்கம். இவ்வாண்டின் கூடுதல் சிறப்பாக அவர்தம் 89வது பிறந்த நாளை நினைவு கூறுவதோடு நிற்காமல் உலகெங்கிலும் உள்ள இசை ஆர்வலர்களின் இதயங்களில் தனது தனி முத்திரையை பதித்த, புகழ்பெற்ற பாடகர் திரு. S.P. பாலசுப்பிரமண்யத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மரங்களை நட்டு ஓர் நகர்ப்புற வனத்தினை உருவாக்க சிறுதுளி முடிவு செய்தது.

SPB அவர்களின் இழப்பு ஈடு செய்யமுடியாத ஒன்று. அவரின் கடைசி காணொளி இசை நிகழ்ச்சியில் இயற்கை அன்னைக்கு நாம் எல்லோரும் இழைத்த பாதகத்தை மேலும் தொடராமல் அன்னை பூமியை பாதுகாக்குமாறு உருக்கத்தோடு கேட்டுக்கொண்டார்.
SPB யின் 74 மகிமை நிறைந்த ஆண்டுகளை நினைவு கூறும் வகையில் 74 மரங்களை உள்ளடக்கிய ஓர் நகர்ப்புற வனத்தினை – SPB வனம் - உருவாக்க திட்டமிட்டது.
SPB வனத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இங்கு நடப்பட்டுள்ள மரங்கள் - இசைக்கருவிகளை உருவாக்க பயன்படுத்தப்படும் மரங்களின் மரக்கன்றுகள் ஆகும். SPB அவர்களால் புகழ்ந்து பாடப்பட்ட, கடவுள்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஸ்தல விருட்சங்கள் மற்றும் அவரது பிறந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தின் சிறப்பு மரமான செண்பக மரமும் இங்கு நடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மரமும் SPB அவர்கள் பாடிய பிரபலமான பாடலின் பெயரைக் கொண்டது.
கோவை நகர் பகுதியைச் சார்ந்த அனைத்து பாடகர்கள், கோவை மக்களின் சார்பாக ஒரு சிறந்த இசை கலைஞருக்கு சிறுதுளியின் துணையோடு பசுமை அஞ்சலி செலுத்தினார்கள். பசுமை அஞ்சலி இசை அஞ்சலியோடு இணைந்து தென்றலாய் காற்றில் கலந்து SPB அவர்களின் ஆன்மாவுக்கு ஆத்மார்த்தமான சமர்ப்பணம் சிறப்புற நடைபெற்றது.
SPB வனத்தினை SPB யின் மகன் S.P.சரண் மற்றும் சகோதரி S.P. சைலஜா அவர்கள் காணொளி வழியாக தொடங்கி வைத்தார்கள். அதை தொடர்ந்து S.P.சரண், பண்ருட்டி பலா மரக்கன்றினையும் S.P. சைலஜா அவர்கள் மாமரக் கன்றினையும் காணொளி வழியாக நட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
மேலும் A.R. ரகுமான் அவர்களும் ஸ்ரீநிவாஸ் அவர்களும் காணொளி வழியாக தனது அஞ்சலியை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் சிறுதுளி அறங்காவலர்கள், APEX உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், பாடகர்கள், இசை கலைஞர்கள் மற்றும் SPB ரசிகர்கள் அறக்கட்டளையின் பிரதிநிதிகளும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
வனத்தின் தனித்தன்மை பற்றியும் டாக்டர் கலாம் அவர்களுடன் சிறுதுளி பயணித்த நாட்களை பற்றியும் சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், பகிர்ந்து கொண்டார். சிறுதுளியின் உயர்மட்ட குழுவின் சார்பாக PP சுப்பிரமணியம் மற்றும் ஒருங்கிணைப்பாளர் B. சரவணன் ஒருங்கிணைப்போடு சிறுதுளியின் உறுப்பினர்கள் நிகழ்ச்சியை சிறப்புற ஏற்பாடு செய்திருந்தனர். வழக்கறிஞர் மற்றும் மெல்லிசை பாடகர் C.G. குமார் ஆடியோ வீடியோ பதிவுகளை தொகுத்து வழங்கினார். ஜான் சுந்தர் மற்றும் இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு மரங்கள் நட்டு இசையஞ்சலியை செலுத்தினர். நகர்ப்புற காடுகளை உருவாக்க உதவியதற்காகவும், அவற்றினை பராமரிக்க உறுதி கூறியதற்காகவும், அதன் மூலம் கோவை மக்களுக்கு சுவாசிக்க நல்ல காற்றினை கொடுக்க வழி செய்ததற்கும், அந்த நல்ல உள்ளங்களுக்கு சிறுதுளியின் வன அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் V. சந்திரசேகர் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார். விழாவில் கோவையை சேர்ந்த பின்னணி பாடகர்கள் C G குமார், ஜான் சுந்தர், பாடகர்கள், இசைக்கருவி கலைஞர்கள் பங்கு கொண்டு நெகிழ்ந்தனர்.
கோவை மக்களின் மிகுந்த ஆதரவினால், கோவிட் மற்றும் தனிநபர் இடைவெளிக்காக கூட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு விழா சிறுதுளி வளாகத்தில் குறைந்த நபர்களுடன் நடத்தப்பட்டது.
இந்த மரங்களின் வகைகளை பின்னாளில் நட ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது.
தேர்வு செய்யப்பட்ட மரங்கள்
இசைக்கருவிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மரங்கள்
1. செஞ்சந்தனம்
2. ரோஸ்வுட்
3. வேம்பு
4. மஹோகனி
5. சில்வர் ஓக்
6. சந்தன மரம்
7. தேக்கு மரம்
8. வேங்கை மரம்
9. புன்னை மரம்
10. கருங்காலி மரம்
11. பண்ருட்டி பலா
12. மா மரம்
13. மூங்கில் மரம்
ஸ்தல விருட்சம் மற்றும் வாசனை மரங்கள்
1. கடம்பா
2. மருதம்
3. மகிழம்
4. நாகலிங்கம்
5. வன்னி
6. பன்னீர் புஷ்பம்
7. நாவல்
8. பவளமல்லி பாரிஜாதம்
9. மனோரஞ்சிதம்
பிறந்த நட்சத்திர மரம் – ஆயில்யம்
- செண்பகம்