சின்னஞ்சிறு கைகளில் இனி சுட்டியானை..! இயல்வாகை வெளியீடாக வந்துள்ளது!

கோவை: இயற்கை சார்ந்த தகவல்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வது ஒவ்வொருவரின் கடமையாகும். அதிலும் மழலைகளுக்கு, குழந்தைகளுக்கு கதை கூற வேண்டும் என்றால் அவர்களின் மொழியில் கூற வேண்டும்.


கோவை: இயற்கை சார்ந்த தகவல்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வது ஒவ்வொருவரின் கடமையாகும். அதிலும் மழலைகளுக்கு, குழந்தைகளுக்கு கதை கூற வேண்டும் என்றால் அவர்களின் மொழியில் கூற வேண்டும்.

யானைகள், புலிகள், சிறுத்தைகள், பறவைகள், பட்டாம் பூச்சிகள் என சுற்றுச்சூழலில் உள்ள உயிரினங்களை பற்றி கூற வேண்டும் என்றால் அதற்காக ஒரு இதழ் வேண்டும் அல்லவா! இதோ வந்துவிட்டது குழந்தைகளுக்கான மாத இதழான 'சுட்டி யானை' ஆகும். இயல்வாகை வெளியீடாக மாதம் தோறும் வெளி வருகிறது.

பறவைகள், விலங்குகள், செடி, கொடி, தாவரங்கள், மரங்கள் என நுண்ணுயிர்கள் முதல் பேருயிர்கள் வரை தமிழகத்தில் இருக்கும் பல்லுயிர்களைப் பற்றி பாட்டாக விளையாட்டாக, புதிராக குழந்தைகளுக்கு சொல்வதற்காகவும் அழகிய ஓவியங்கள், ஆச்சர்யமான புகைப்படங்களுடன் வனப் பேரரசனான யானையைப் பற்றி நிறையப் பேசுகிற இதழாக வெளி வந்துள்ளது.

இதழ் ஒன்றில் மொரிதீரியம் என்ற யானைகளின் மூதாதையரிலிருந்து துவங்கி மாமுத் வழியாக தற்போதைய யானைகள் வரை யானைகளின் பரிணாம வளர்ச்சி பற்றி அழகாக எடுத்து கூறப்பட்டுள்ளது. யானையைப் பற்றி நாம் அறிந்த செய்திகளோடு, அறியாத செய்திகளான மடகாஸ்கர் தீவில் வாழ்ந்த ஒரு பெரிய யானையின் உயரம், ஒரு பெரிய குதிரையின் எடை கொண்ட யானைப் பறவையைப் பற்றிய, ஆப்பிரிக்காவின் ஜிபூட்டியில் வாழும் யானை மூஞ்சுறுவைப் பற்றிய நாமறியாத ஆச்சர்யமான செய்திகளும் உண்டு.

தாவரங்களில் கூட ஆனை குன்றிமணி, ஆனைக் கொம்பன் வெண்டை, யானை கற்றாழை, யானை பிடுக்கன் மரம், யானைக் கொழிஞ்சி மரம் என யானை பெயர்களில் உள்ள மரங்களை பற்றிய அறிய தகவல்கள் இடம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.

சிறுவர்களுக்காக வண்ணம் தீட்டி மகிழ, புள்ளிகளை இணைத்து உருவங்களை உருவாக்க, புதிர்கள் என படைப்பாற்றலை அதிகரிக்கும் வகையிலான விஷயங்களும் உண்டு.

தாவரங்கள், பறவைகள், விலங்குகள் என இதழின் அத்தனையுமே யானையோடு தொடர்புடையாகவே இருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. இது குறித்து மேலும் தெரிந்துகொள்ள இயல்வாகையை சேர்ந்த அசோக்குமார் அவர்களிடம் பேசினோம். தமிழகத்தில் உள்ள இயற்கை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர், கதை சொல்லிகள், யானை ஆர்வலர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் இந்த இதழ் வெளிவந்துள்ளது.



சிறுவர்களுக்கான இதழ் என்று சொல்லி அச்சிட்டுத் தருபவர்கள், சிறிய அளவிலான எழுத்து வடிவத்தையே புத்தகம் முழுக்க பயன்படுத்துவார்கள். குழந்தைகளாயிற்றே... சற்றே பெரிய எழுத்து வடிவத்தை பயன்படுத்துவோம் என்று எண்ண மாட்டார்கள். அதையும் நுணுக்கமாக கருத்தில் கொண்டு, பெரிய எழுத்து வடிவில் கட்டுரை, கதை, பாடல் என அனைத்தையும் சுட்டி யானை கொண்டிருப்பது சிறப்பான முன்னெடுப்பாகக் கொண்டு வந்து இருக்கிறோம்.

இதழை பெற தொடர்புக்கு

12 இதழ்கள் கொண்ட ஆண்டு சந்தா 350/- ரூபாய். அஞ்சல் செலவுடன். சுட்டி யானை, இயல்வாகை வெளியீடு

Iyalvaagai Publication

Ac/no 271402000000337

Indian Overseas Bank

Uthukuli Branch

IFSC Code - IOBA0002714

Mobile no: 9500125 125

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....