கோவை கோட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதலாக 600 பேருந்துகள் இயக்க திட்டம்

கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஆயுத பூஜையை முன்னிட்ட வரும் 22ம் தேதி முதல் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கோவை கோட்ட அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.


கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஆயுத பூஜையை முன்னிட்ட வரும் 22ம் தேதி முதல் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கோவை கோட்ட அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அதன் பின் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட போது கோவை கோட்டத்திற்கு உள்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் 1,020 பேருந்துகள் இயக்கப்பட்டன.

பயணிகளின் எண்ணிக்கை அதிகமானதை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கோவை கோட்டத்தில் 300 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தற்போது 1,320 அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வரும் 25ம் தேதி ஆயுதபூஜை வருவதால், பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து, கோவை கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை கோட்டத்தில் உள்ள 4 மாவட்டங்களில் மொத்தமுள்ள 2,641 பேருந்துகளில் தற்போது 1,320 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் முகூர்த்த தினங்களை முன்னிட்டு, கோவை கோட்டத்தில் வருகின்ற 22ம் தேதி முதல் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோவை, மதுரை, திருச்சி, கரூர், தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்து அதிகரிக்கப்படும்,’’ என்றார்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....