கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை, நிர்வாக வசதிக்காக கோவை மாவட்டத்தை பிரித்தாலும், வீடுகள் வேறாக இருந்தாலும் இதயங்கள் ஒன்றாக உள்ளது என்ற வரிகளுக்கு ஏற்ப, முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது, என்று புகழாரம் சூட்டினார், திமுக தலைவர் ஸ்டாலின்.
கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை, நிர்வாக வசதிக்காக கோவை மாவட்டத்தை பிரித்தாலும், வீடுகள் வேறாக இருந்தாலும் இதயங்கள் ஒன்றாக உள்ளது என்ற வரிகளுக்கு ஏற்ப, முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது, என்று புகழாரம் சூட்டினார், திமுக தலைவர் ஸ்டாலின்.

இன்று காணொளி காட்சியின் மூலம், கோவை மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய, திமுக தலைவர் ஸ்டாலின், கோவை மாவட்டத்தின் முன்னேற்றத்தில் திமுகவின் பங்கு குறித்தும், கலைஞரின் வாழ்வில் பின்னி பிணைந்த ஊராக கோவை இருந்தது, குறித்தும் கலந்துரையாடினார்.
தொழில் நகரமான கோவை, தற்போது அதிமுக வின் பிடியில் சிக்கி, சரிவை சந்தித்து வருவதாகவும், இதுகுறித்து, இந்த அரசு என்றாவது தொழிற் சங்கங்களை அழைத்து அவர்களின் தேவை குறித்து கேட்டுள்ளதா..? நிறுவனங்களுக்கு வருமானம் இல்லை, தொழிலாளர்களுக்கு வேலை இல்லை, புதிய வேலைவாய்ப்பு உருவாவதாகவும், தெரியவில்லை, என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், உரையாடிய, திமுக தலைவர் ஸ்டாலின், கூறுகையில்:
கலைஞரின் திரை உலக பயணத்தில், கோவைக்கு முக்கிய பங்கு உண்டு, கலைஞரும் எம்.ஜி.ஆரும் முதன் முதலில் சந்தித்த இடம் கோவை தான். இப்படி கலைஞரின் வாழ்வில் பின்னி பிணைந்த ஊர் கோவை..!
கோவை மீது கருணாநிதி மிகுந்த பாசம் கொண்டவர். அதனால் தான், செம்மொழி மாநாட்டினை கோவையில் நடத்தி, தமிழர்களின் எண்ணத்தை, அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு மூலம் அறிவிக்க வைத்தவர்.

மேலும், கோவையில் உள்ள கொங்கு வட்டார கவுண்டர் இன மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் கருணாநிதி தான். மேலும், அருந்ததியர் இன மக்களுக்கு 3% இட உள் ஒதுக்கீடு வழங்கியதும் அவர் தான்.
கோவைக்கு பல்வேறு மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
ஒரு புறம் தமிழும் வாழட்டும் ஒரு புறம் தமிழரும் வாழட்டும் என எண்ணுபவர் கருணாநிதி.ஆனால், இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்களுக்கு மக்களை பற்றி கவலை இல்லை அரசாங்க கஜானாவை, தங்கள் வீட்டு கஜானாவாக்க தான் நினைக்கிறார்கள். அதானல் தான் அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியும் இல்லை, தொழிலாளர் மலர்ச்சியும் இல்லை.
ஏராளமான, தொழில்களை கொண்டது கோவை மாவட்டம். ஒன்றரை லட்சம் தொழில் நிறுவனங்களில் 15 ஆயிரம் நிறுவனங்கள், மொத்தமாக முடங்கிவிட்டதாக, தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
தொழில் வளர்ச்சி ஏற்பட, மாநில அரசு முதலில் வலிமையான, குழப்பமில்லாத, தொலைநோக்கு பார்வைக்கொண்ட அரசாக இருக்க வேண்டும். இதையெல்லாம், விட முதல்வராக இருப்பவர் மக்களின் நம்பிக்கை பெற்றவராக இருக்க வேண்டும்.ஒரு தலைமைக்கு கட்டுபட்டதாக இருக்கவேண்டும்.
எந்த இலக்கணமும் இல்லாத ஆட்சி தான் அதிமுக ஆட்சி. கடந்த நான்கு ஆண்டுகளக உட்கட்சி குழப்பத்தில் உள்ள ஆட்சியை நம்பி யாரும் முதலீடு செய்யவரமாட்டார்கள். முதல்வரும், துணை முதல்வரும், வெளி நாடுகளுக்கெல்லாம் சென்றார்கள் எங்கிருந்து, எவ்வளவு முதலீடு கிடைத்தது..? என்று தெரியவில்லை.
கமிஷன், கலைக்ஷன், கரப்ஷன் இம்முன்றை மட்டுமே கொள்கையாக வைத்துள்ள, அதிமுக வை நம்பி யாரும் முதலீடு செய்யமாட்டார்கள். பெரிய முதலீடு தான் ஈர்க்கமுடியவில்லை, இருக்கின்ற சிறு முதலீடுகளையும், அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.
இந்த அரசு, தொழிற் சங்கங்களை அழைத்து அவர்களின் தேவை குறித்து கேட்டுள்ளதா..? நிறுவனங்களுக்கு வருமானம் இல்லை, தொழிலாளர்களுக்கு வேலை இல்லை, புதிய வேலைவாய்ப்பு உருவாவதாகவும், தெரியவில்லை.
இச்சூழலில், பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து ஆயிரம் கொடுங்கள் என்று கூறினேன், அதை கொடுப்பதற்கு அவர்களுக்கு மனம் இல்லை. இப்படிப்பட்ட, மக்கள் விரோதிகள் கையில் தான் தமிழ்நாடு சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி இரண்டரை இலட்சம் கோடி ருபாய்க்கு முதலீட்டை ஈர்த்ததாக சொன்னார்கள். இப்போது, இவர் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி மூன்று லட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்ததாக சொன்னார். நானும் பலமுறை, அதுகுறித்த விபரங்களை வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கேட்டேன், முதல்வர் வெளியிட்டாரா?
அத்திகடவு அவினாசி திட்டம் கனவை தான் நிறைவேற்றியதாக, சொல்வது பொய், அதற்காக கொள்கை ரீதியாக ஏற்று போராடியது திமுக.
நீர் நிலைகளை மீட்டெடுத்து குடிமராமத்து பணிகளை மேற்கொள்வதாக முதல்வர் கூறுகிறார் இது ஆளும் கட்சியினர் கொள்ளையடிப்பதற்காக உருவாக்கிய திட்டமிது.
இதையெல்லாம் விவசாய சங்கங்கள், ஆயகட்டுதாரர்கள் மூலமாக தான் செய்ய வேண்டும், ஆனால், ஆளும் கடையினரோ, அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு பணிகள் நடைபெற்றுருப்பதாக காட்டுகிறார்கள்.
பல்வேறு மாவட்டங்களில் விவசாய சங்கங்கள், ஆட்சியர் அலுவலகம் முன்பு போராடுகிறார்கள். குடிமராமத்து திட்டம் ஆளும் கட்சியினருக்கு பணம் பிரித்து கொடுக்க தான் நடக்கிறது.
மின்மிகை என்றால் முதல்வருக்கும் மின்சாரத்துறை அமைச்சருக்கும் புரியவில்லை..மின்சாரத்தை. கடன் வாங்கும் அரசு எப்படி மின்மிகை அரசாகும்?
உழவன் வீட்டில் உதித்த ஒருவன் என்கிறார், அறிக்கையில் தன்னை. ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ஆதரித்ததை விட வேறு எந்த துரோகத்தை செய்யமுடியாது, இவரால்.
குறைந்தபட்ச, ஆதரவிலையை பற்றி 3ல் 1ல் கூட குறிப்படவில்லை பிறகு ஏன் அதை, ஆதரிக்கவேண்டும்..? பச்சை துண்டு போட்டுக்கொண்டு, எடப்பாடி செய்யும் பச்சை துரோகம்.
அதிமுக உள்கட்சி சண்டையும், முதல் வேட்பாளரும்
அதிமுக என்கிற கொள்ளைக்கார ஆட்சிக்கு யார் தலைமை தாங்க என்கிற சண்டை தான் அக்கட்சியில் நடக்கிறது. கொள்ளையர்களின் அரசர், எடப்பாடி பழனிச்சாமி தான் என்று அமைச்சர்கள் சேர்ந்து முடிவெடுத்துவிட்டார். அதன் பிறகு ஏதோ பெரியதாக சாதித்தது போல பன்னீர்செல்வத்தை வீழித்தியது போல, எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வரும் தேர்தலில், அதிமுக தோற்க போகிறது, எனவே அதற்கு யார் முதல்வர் வேட்பாளராக இருந்தால் என்ன? என்று பன்னீர்செல்வம், இவரை மாட்டிவிடுள்ளார். இது தெரியாமல், எடப்பாடி பழனிச்சாமி மகிழ்ச்சியில் திளைக்கிறார். அவர், வெளியிட்டுள்ள அறிக்கையையில் குறிப்பிட்டுள்ள அத்தனையும் பொய் தான்.
3500 கோடி ஒப்பந்தங்கள் சொந்தங்கள் மற்றும் பினாமிகளுக்கு வழங்கியது, கோட நாடு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, நீட் மாணவர்கள் தற்கொலை, என அனைத்திற்கும் அதிமுக தான் காரணம்.
ஒரே ஒரு அறிக்கையில் பத்து பொய் என்று சொன்னால், அவர் நித்தமும் சொல்லும் பொய் நூற்றுக்கணக்கில் இருக்கும். இவ்பொய் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்.
சாமானிய நடுத்தர எழை மக்களுக்கான ஆட்சி திமுக ஆட்சி அடுத்து அமைய உள்ளது. இதனை இவ்விழாவ சூளுரையாக எடுத்துசொல்கிறேன், என்று மு க ஸ்டாலின் கூறினார்.
மேலும், மதுரையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை, காவேரி உரிமையை மீட்டெடுத்து விட்டதாக கூறிவிட்டு, இன்னமும்
தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகத்திடமிருந்து பெற்று தரவில்லை, மேகதாது அணை விவகாரம், டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்தது மக்களை திசை திருப்புவதற்காக அறிவிப்பு, என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஆட்சியை சாடினார்.