கோவை: கோவை குரும்பபாளையம் அருகே விறகு சேகரிக்க சென்றவர் மரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பெருமாள்(48). இவரது மனைவி அனுராதா(45). இவர்கள் கோவை குரும்பபாளையம் பகுதியில் குடிசை அமைத்து தங்கி அந்த பகுதியில் கட்டிட வேலைகள் செய்து வந்தனர்.
கடந்த 11ம் தேதி சமைப்பதற்காக விறகு வெட்ட குரும்பபாளையம் காட்டு பகுதிக்கு இருவரும் சென்றுள்ளார். மரத்தின் மீது ஏறி மரக்கிளைகளை வெட்டிக் கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார். இதில் பெருமாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அனுராதா கணவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளார். இதனிடையே, அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.