கடைகளில் குளிர் சாதன வசதியை பயன்படுத்த வேண்டாம், சீரான காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும், மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள்

கோவை: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்டவற்றில் குளிர் சாதன வசதியை பயன்படுத்த வேண்டாம், என மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்டவற்றில் குளிர் சாதன வசதியை பயன்படுத்த வேண்டாம், என மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் தீவிர தடுப்பு நடவடிக்கையின் காரணமாக, கொரோனா பாதிப்பு தற்போது படிபடியாக குறைந்து வருகிறது. இதனை, மேலும் குறைக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தீவிர நோய் தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பொதுவாக கொரோனா வைரஸ் குளிர்ச்சியான பொருட்களில் அதிக நேரம் உயிர் வாழும் என்பதால் மாநகராட்சி பகுதிகளில் இருக்கும் குளிர்சாதன வசதி கொண்ட கடைகளில் குளிர் சாதன வசதியை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும், கடைகளில் குளிர்சாதன வசதிக்கு பதிலாக மின்விசிறியை பயன்படுத்த வேண்டும். சீரான காற்றோட்டத்துக்கும், காற்று வெளியேறுவதற்கும் ஜன்னல் வசதியோ அல்லது ‘வெண்டிலேசன்’ வசதியோ செய்து இருக்க வேண்டும் என்று கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது, என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...