பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட திண்டுக்கல் சிறுமிக்கு நீதி கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

கோவை: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட திண்டுக்கல் சிறுமிக்கு நீதி கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட திண்டுக்கல் சிறுமிக்கு நீதி கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், குறும்பட்டியை சேர்ந்த சவரத் தொழிலாளியின் 12 வயது மகள் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதி என கடந்த 29ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை கண்டித்தும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நீதி கோரியும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர் புதுக்கோட்டை ஜெயசீலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த குற்றவாளியை தப்பிவிடாமல் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர் செயசீலம் கூறுகையில், நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும் முறையான அதிகாரியிடம் இந்த விசாரணை ஒப்படைக்க வேண்டும் என்றார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக மாறி வருவதாக கூறிய அவர், நீதி பிரண்டு சாட்சிகள் இல்லை என்பது மேலும் குற்றங்களை அதிகரிக்க செய்யும் எனவும் மீண்டும் மறு விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...