வால்பாறையில் திரைப்படப் பாணியில் கிணற்றை காணவில்லை என்பது போல் நகராட்சி நிழற்குடையை காணவில்லை என பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

கோவை: வால்பாறையில் திரைப்படப் பாணியில் கிணற்றைக் காணவில்லை என்பது போல் நகராட்சி நிழற்குடையை காணவில்லை என பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: வால்பாறையில் திரைப்படப் பாணியில் கிணற்றைக் காணவில்லை என்பது போல் நகராட்சி நிழற்குடையை காணவில்லை என பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி அலுவலகம் முன் கடந்த 2012ம் ஆண்டு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்நிலையில் இன்று காலையில் நிழற்குடை முற்றிலுமாக இடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு இருந்தது. இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனிடையே, நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ் அலுவலகத்தை விரிவுபடுத்த பழைய கட்டிடங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று இரவு பதினோரு மணி அளவில் துவங்கப்பட்ட இந்த நிழற்குடை பணி காலை நிறைவடைந்தது.



பகலில் இந்த பணியை செய்தால் போக்குவரத்து பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற நிலையில் இந்த பணியை தீவிரமாக முடிக்கப்பட்டது.

இதனை அறிந்த ஆணையாளர் உடனடியாக நேரில் வந்து அந்தப் பகுதியில் உள்ள நிழற்குடையை நவீன முறையில் கட்டித்தரப்படும் என்று கூறியதன் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். மேலும், வால்பாறை பகுதியில் படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா போன்ற பணிகளை துரிதமாக செய்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்படும் வகையில் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதனை தெரிவித்துள்ளார்.

Newsletter

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...