கோவையில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி ரூ.10 கோடி மோசடி - தங்கம் மற்றும் வைர நகை வியாபாரி கைது!

கோவை: கோவையில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் 10 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த தங்கம் மற்றும் வைர நகை வியாபாரியை காவல் துறையினர் கைது செய்தனர்.


கோவை: கோவையில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் 10 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த தங்கம் மற்றும் வைர நகை வியாபாரியை காவல் துறையினர் கைது செய்தனர்.

கேரள மாநிலம் திருச்சூர் தேரமங்களம் பகுதியை சேர்ந்தவர் செரின். 38 வயதான இவர் மும்பையில் தங்கம் மற்றும் வைர நகை வியாபாரம் செய்து வந்தார். மேலும் வின் வெல்த் இண்டர்நேசனல் என்ற பெயரில் கோவை சரவணம்பட்டி பகுதியில் பிரோ ஜோன் வணிக வளாகத்தில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி வந்தார். அந்நிறுவனத்தில் 20 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் வாரந்தோறும் ஆயிரத்து 600 ரூபாய் வீதம் 25 வாரங்களுக்கு 40 ஆயிரமாக பணம் தரப்படும் என விளம்பரப்படுத்தியுள்ளார்.

மேலும், முதலீடு செய்யும் பணத்திற்கு ஏற்ப இரட்டிப்பாக பணம் தரப்படும் எனவும் தங்கம் மற்றும் வைர நகைகள் வழங்கப்படும் எனவும் செரின் தெரிவித்துள்ளார். இதனை நம்பி தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இலட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்துள்ளனர். முதலீட்டாளர்களுக்கு சில வாரங்கள் முறையாக பணம் தந்த செரின் பின்னர் பணம் தராமல் இழுத்தடித்துள்ளார்.

இதுதொடர்பாக கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த சேவியர்(50) என்பவர் ஒன்றரை இலட்ச ரூபாய் மோசடி செய்ததாக கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த டிசம்பர் மாதம் புகார் அளித்தார். இதன்பேரில் செரின் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் செரின் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக - கேரள எல்லைப்பகுதியான வாளையார் பகுதியில் செரினை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, செரினிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் 10 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததும் மோசடி செய்த பணத்தில் திருச்சூரில் வீடு, வணிகவளாகம், கார் உள்ளிட்டவை வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. செரினின் மனைவி ரம்யா மற்றும் அந்நிறுவன ஊழியர்கள் சைனேஷ், ராய், பிஜூ மோன் ஆகிய 4 பேர் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....