கோவையில் மூதாட்டி கொலை வழக்கில் குற்றவாளிகள் மூன்று பேர் கைது - மற்றவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரம்!

கோவை: கோவையில் மூதாட்டி கொலை வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் மூதாட்டி கொலை வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை வைசியாள் வீதி கெம்பட்டி காலனியை சேர்ந்த தனலட்சுமி (62) என்ற மூதாட்டி கடந்த சில தினங்களுக்கு முன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இவருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ள நிலையில், இவர் கொலை செய்யப்பட்ட சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த கொலை சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் தரப்பில் கிடைக்கப் பெற்ற தகவலில் கெம்பட்டி காலனி நான்காவது வீதியை சேர்ந்த திலக் என்பவரின் மனைவி லதா (எ) ராணி மளிகை சாமானங்கள் வாங்க அடிக்கடி சென்று வரும் போது தனலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. மேலும், தனலட்சுமி சிறு சிறு உதவிகள் செய்துள்ளார். நாளடைவில் பழக்கம் அதிகரிக்க தனலட்சுமியிடம் ஏராளமான பணம் மற்றும் நகைகள் இருப்பது லதாவிற்கு தெரியவந்தது. இதனை தனது கணவர் திலக்கிடம் கூறியுள்ளார்.

இதனிடையே, பட்டறை ஒன்றில் பணியாற்றி வரும் திலக் ஏற்கனவே கடன் தொல்லையில் இருந்ததால் தனது சகோதிரி மாலா(எ) ரேவதியுடன் மற்றும் திலக்கின் நண்பர்களான செல்வன், மகேஷ்குமார், சத்தியசீலன் ஆகியோர் தனலட்சுமியிடம் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, தனலட்சுமி வீட்டிற்கு வழக்கம் போல லதா சென்றுள்ளார். அவரை தனலட்சுமி உள்ளே அனுமதிக்க சமையல் அறைக்கு அழைத்துச் சென்று நீண்ட நேரமாக பேசி வந்துள்ளார். பின்னர், மற்றவர்கள் வீட்டின் உள்ளே நுழைந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் தனலட்சுமி வெளியே வர கத்தி மற்றும் அரிவாள் மூலம் தனலட்சுமியை தாக்கியவர்கள் பீரோவில் இருந்த 85 பவுன் நகை கழுத்தில் இருந்த 10 பவுன் மற்றும் மூன்றரை லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

மூதாட்டியின் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் 4 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய செல்வன், மகேஷ்குமார், சத்தியசீலன் ஆகியோர் கைது செய்துள்ளனர். மற்றவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....