பொள்ளாச்சி: இந்தாண்டு, தென் மேற்கு பருவமழை உரிய நேரத்தில் பெய்ததால், மக்காசோளத்தில் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை, என பொள்ளாச்சி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு, சொக்கனூர், சிங்கையன்புதூர் ஆகிய பகுதிகளில் மானாவாரி பயிரான மக்காச்சோளம் அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டிருந்தனர்.
இந்தாண்டு சித்திரை மாதம் பயிரிடப்பட்ட மக்காச்சோளத்தில், சாகுபடியில் கதிர் வந்த நேரத்தில், மழை பெய்யாததால் மக்காச்சோளம் விளைச்சல் பாதிக்கப்பட்டது. மேலும், புரட்டாசி மாதம் மக்காசோளம் அறுவடை செய்யும் நேரத்தில், பெய்த மழை காரணமாக மக்காசோளம் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளது, என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனால், ஏக்கர் ஒன்றுக்கு 2.5 டன் மக்காச்சோளம் கிடைக்க வேண்டிய இடத்தில், தற்போது 1.5 டன் மட்டுமே மக்காச்சோளம் கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில், கோழித்தீவனம், மாட்டுத்தீவனத்திற்கு வியாபாரிகள் நேரடியாக வந்து ஆண்டுதோறும் 100 கிலோ எடை கொண்ட மக்காச்சோளம் மூட்டையை 1800 ரூபாய் விலை கொடுத்து வாங்கிச் சென்றனர்.
ஆனால், இந்தாண்டு 1,400 ரூபாய் மட்டுமே விலை கொடுத்து வாங்கிச் செல்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், ஒரு ஏக்கருக்கு அறுவடை செய்ய 6 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தும், எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை, எனவும் விவசாயிகள் வேதனைபட தெரிவித்தனர்.