கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட தடாகம் பகுதியில் ஒற்றை காட்டு யானை தாக்கி வட மாநில தொழிலாளி உயிரிழப்பு!

கோவை: கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட தடாகம் பகுதியில் ஒற்றை காட்டு யானை தாக்கி வட மாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட தடாகம் பகுதியில் ஒற்றை காட்டு யானை தாக்கி வட மாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான தடாகம், சின்ன தடாகம், சோமையாம் பாளையம், எண் 24 .விரபாண்டி போன்ற ஊர்களில் அதிகளவு செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. தமிழக தொழிலாளர்கள் மட்டும் இல்லாமல் வடமாநில தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு ARS சேம்பரில் வேலை பார்க்கும் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சரிதுல் இஸ்லாம் (20) என்பவர் பாத்ரூம் செல்வதற்காக காட்டுப்பக்கம் சென்றுள்ளார்.

அப்போது, வனப்பகுதியில் இருந்த ஒற்றை காட்டு யானை தாக்கியதில் இடது முழங்காலுக்கு கீழே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவிக்கப்பட்டு முதலுதவி அளித்தனர். மேலும், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...