கோவையில் புதிய வேளாண் சட்ட மசோதாவை திரும்பப் பெற கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும், புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.



கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும், புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. 



அதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம், வேளாண் பல்கலை, மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மறியல் போராட்டத்தில் நடைபெற்றது. 



இந்த சட்டத்தால், விவசாயிகள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுவார்கள், குறிப்பாக கார்ப்பரேட்டுகள் கையில் சிக்கி விவசாயிகள் அழியும் நிலை உருவாகும், என்று அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 



இன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கோவையில் நடைபெற்ற போராட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டம் விவசாயிகளின் வாழ்வையும், எதிர்காலத்தையும் கேள்விக்குறியாகியுள்ளது எனவும், விவசாயிக்குக் கிடைக்க வேண்டிய குறைந்த பட்ச ஆதார விலைக்கும் கேடு ஏற்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டி, மத்திய அரசை கண்டித்தும் அதற்கு துணை போகும், மாநில அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...