கோவை: பொங்கல் பண்டிகையின் போது அரசு சார்பில் பொதுமக்களுக்கு புதுப்பானை, அடுப்புகள் வழங்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் நாற்பது லட்சத்திற்கும் மேலான மண்பாண்ட தொழிலில் செய்து வருகின்றனர். குறிப்பாக, ஸ்ரீ வில்லிபுத்தூர், கோவில்பட்டி, விருதுநகர், வேலூர் பகுதிகளில் அதிக அளவில் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், வடவள்ளி, கணபதி, வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளில் குலாலர் சமூகத்தினர் மண்பாண்ட தொழிலில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒரு லட்சம் பேர் இருக்கக்கூடிய இந்த சமூகத்தில் 10,000 பேர் மட்டுமே இந்த தொழில் செய்வதாகவும் அவர்கள் வாழ்வாதாரம் இதை நம்பியே உள்ளதாகவும் பொங்கல் பண்டிகையின் போது, தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக புதுப்பானை, அடுப்புகள் வழங்கிட வேண்டும் என்றும் தீபாவளி மற்றும் கார்த்திகை தீபத் திருநாள்களில் கோவில்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்த தங்குதடையின்றி அனுமதி வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மருதாச்சலம் கூறுகையில், கொரோனா தொற்று காலத்தில் தமிழக அரசு நலவாரியத்தில் பதிவு செய்து இருந்த தொழிலாளர்களுக்கு 2000 வழங்கியது. இது போதுமானதாக இருக்கவில்லை எனவும் ரூ.5000 மற்றும் ஒரு மூட்டை அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.