கோவையில் கொரோனா பிரச்சார ஆட்டோவில் இருந்து ஒலிபெருக்கி காணாமல் போனதால் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை!

கோவை: கோவையில் கொரோனா பிரச்சார ஆட்டோவில் இருந்து ஒலிபெருக்கி காணாமல் போனதால் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் கொரோனா பிரச்சார ஆட்டோவில் இருந்து ஒலிபெருக்கி காணாமல் போனதால் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சுப்ரமணியன் (52). கடந்த சில மாதங்களாக கோவை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக அவரது ஆட்டோவை கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக ஓட்டி வந்துள்ளார். கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக கோவை மாநகராட்சி சார்பில் ஒலிபெருக்கிகள் மற்றும் அதற்கு தேவையான சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் ஆட்டோவில் மாட்டியிருந்த மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட ஒலிபெருக்கி மற்றும் அதற்கு தேவையான சாதனங்கள் திருடு போய் உள்ளது. இதனால் மன உலைச்சலுடன் இருந்த அவர், நேற்று அதிக அளவு மது அருந்திவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது மனைவி புஷ்பா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பீளமேடு போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தில் இருந்து ஒலிபெருக்கி சாதனங்கள் தொலைந்து போனதின் காரணமாக ஆட்டோ ஓட்டுனர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...