பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் தங்க கட்டி வாங்கித் தருவதாகக் கூறி நூல் வியாபாரியிடம் ரூ7.80 லட்சம் மோசடி செய்த கடலூரைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (56), நூல் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு குறைந்த விலையில் தங்கக்கட்டிகள் வாங்கித் தருவதாக கூறி, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி (48), என்பவர் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இடைத்தரகராக, செயல்பட்ட பார்த்தசாரதி, தங்கக்கட்டிகள் வாங்க ஆனைமலை அருகே உள்ள அம்பராம்பாளையம் பகுதிக்கு ஆரோக்கியசாமியை வரவழைத்துள்ளார்.
இதையடுத்து, அவரிடம் இருந்து ரூ.7 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை வாங்கி தங்க கட்டிகள் விற்பனை செய்வதாக கூறி வந்த கும்பலிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகினர்.
இதையடுத்து, ஆரோக்கியசாமி பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்திருந்தார். விசாரணை செய்த போலீசார், ஆனைமலை போலீசாரிடம் வழக்கை ஒப்படைத்தனர். இதையடுத்து, ஆனைமலை போலீசார் ஆரோக்கியசாமி கொடுத்த புகாரின் பேரில், பார்த்தசாரதியை கைது செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், ஆரோக்கியசாமி இடம் ரூ.10 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த ஆனைமலை போலீசார், அவரை பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-இல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், தலைமறைவாகி உள்ள மோசடி கும்பலை சேர்ந்த 7 பேரை தேடி வருகின்றனர்.