கோவை: கோவை மாநகர் போலீசார் பொதுமக்கள் புகார்களின், பேரில் வீடு தேடி சென்று விசாரணை நடத்தி தீர்வு காண அறிமுகப்படுத்தியுள்ள திட்டம் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

போலீசாரிடம் புகார் அளிக்க சென்றால் அவர்கள் மதிப்பதில்லை, முறையாக விசாரிக்க வருவதில்லை, மேலும் நடவடிக்கை எடுக்க தாமதம் செய்கிறார்கள், என பொதுமக்கள் அவ்வப்போது புலம்பி வந்த நிலை மாறி, தற்போது போலீசாரே மக்களைத் தேடிச் செல்லும் திட்டம், கோவையில் துவங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று ஒரு புகாரை விசாரிக்க சென்ற ஆர் எஸ் புரம் மகளிர் காவல் துறையினர், இரு தரப்பினரையும் வைத்து, பிரச்சினைக்கு தீர்வு வழங்கியது, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
உக்கடம் கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த 33 வயது தொழிலாளி ஒருவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளன. இவர் குடும்பத்தினரை கவனிக்காமல் கள்ளக்காதலுடன் சுற்றி வருவதாக அனைத்து மகளிர் போலீசில் புகார் தரப்பட்டது.
அதையடுத்து, கோவை ஆர்.எஸ் புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரபாவதி நேரில் சென்று, கணவன் மற்றும் மனைவியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தகாத செயல்களில் ஈடுபட்டால், உங்கள் குடும்பத்தை யார் கவனிப்பது..? உங்கள் பிள்ளைகள் பசியால் வாடினால் பரவாயில்லையா..? என்று அவருக்கு இன்ஸ்பெக்டர் பிரபாவதி அறிவுரை கூறினார். இதை கேட்ட, அந்த தொழிலாளி தன் தவறை உணர்ந்து, இனி நான் என் குடும்பத்துடன் தான் இருப்பேன், மனம் திருந்தி விட்டேன், என உறுதியளித்தார்.
அவரின் மனமாற்றத்தால், அந்த பெண் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, இன்ஸ்பெக்டர் பிரபாவதியை மற்றும் கோவை மாநகர காவல் துறையின் இந்த முயற்சியை மனதார பாராட்டினார்கள்.