கோவை: 27 தே நிமிடங்களில் அன்னூரிலிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு, உடல்நிலை பாதித்த குழந்தையை கொண்டு சேர்த்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மாற்று போக்குவரத்தை ஒருங்கிணைத்த காவலர்களுக்கு, மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கரூர் பகுதியில் நூற்பாலையில் பணியாற்றி வரும் தம்பதியினர், ஷாஜகான் மற்றும் மாமுனி வடமாநிலத்தை சேர்ந்த இவர்களுக்கு, இரு தினங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், குழந்தையின் உடலில் இருந்து சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் இருந்ததால், குழந்தையின் வயிறு வீங்கி சுவாசிக்கச் சிரமப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து, குழந்தையை, அன்னூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று அழைத்துக் கொண்டு வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக குழந்தைக்கு மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
இதனையடுத்து, அவர்கள் ஆம்புலன்ஸ்க்கு காத்திருந்த நிலையில், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வரும், சிரஞ்சீவி என்பவர் குழந்தையை, கோவை அரசு மருத்துவமனைக்கு இலவசமாக அழைத்துச் செல்வதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்பு, தாமதமின்றி, குழந்தை அவசர சிகிச்சைக்காக கோவை செல்வது குறித்து அருகே உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அந்தந்த பகுதி போலீசார் ஆம்புலன்ஸ் வருவது குறித்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்கு வழி வகை செய்யும் வகையில், துரிதமாக ஏற்பாடுகளை செய்தனர். இதனையடுத்து, அன்னூர் அரசு மருத்துவமனையிலிருந்து குழந்தையை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சிரஞ்சீவி, சரியாக 27 நிமிடங்களில், பாதுகாப்பாக, குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்.
தற்போது, கோவை அரசு மருத்துவமனையில் அக்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.