கோவை - திருச்சி சாலையில் மேம்பால பணிகள் நடைபெறும் இடங்களில் தெருவிளக்குகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை: கோவை- திருச்சி சாலையில் மேம்பால பணிகள் நடைபெறும் இடங்களில் தெருவிளக்குகள் இல்லாத காரணத்தினால், இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மேம்பால பணிகள் நடைபெறும் இடங்களில் தெருவிளக்குகள் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: கோவை- திருச்சி சாலையில் மேம்பால பணிகள் நடைபெறும் இடங்களில் தெருவிளக்குகள் இல்லாத காரணத்தினால், இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மேம்பால பணிகள் நடைபெறும் இடங்களில் தெருவிளக்குகள் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை-திருச்சி சாலையில் கோவை அரசு மருத்துவமனை அருகே சுங்கம், ராமநாதபுரம், சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் சிக்னல்கள் உள்ளன. தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலையில் செல்கிறது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். 

எனவே, இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து திருச்சி சாலையில், ரூ.253 கோடியில் மேம்பாலம் அமைக்க கடந்த வருடம் அடிக்கல் நாட்டப்பட்டது.

கோவை திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகில் இருந்து ராமநாதபுரத்தில் உள்ள பங்கு சந்தை அலுவலகம் அருகே வரை இந்த மேம்பாலம் அமைக்கப்படுகிறது. 3.1 கி.மீ தூரத்துக்கு 112 தூண்களுடன் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. ராமநாதபுரத்தில் இருந்து உக்கடத்துக்கு செல்லும் வாகனங்கள் இறங்குவதற்கு வசதியாக சுங்கத்தில் 400 மீட்டர் தூரத்துக்கு 8 தூண்களுடன் பாலம் அமைக்கப்படுகிறது. 

திருச்சி சாலை மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மேம்பால பணிகளுக்காக தெரு விளக்குகள் அகற்றப்பட்டன. ஆனால், அதன் பின் அதற்கு மாற்றாக அங்கு இன்னமும் விளக்குகள் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் வாகன ஒட்டிகள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். 



தென் மாவட்டங்களில் இருந்து வருவோர் மாநகர் பகுதிக்கு வருவதற்கு இச்சாலை வழியாக வரவேண்டியுள்ளதால், மக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘திருச்சி சாலையில் மேம்பால பணிகளுக்காக தெரு விளக்குகள் அகற்றப்பட்டன. ஆனால், அதற்கு மாற்றாக தெரு விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். இரவு நேர விபத்தும் அதிகரித்து வருகிறது,’’ என்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...