கோவையில் தூய்மைப்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணைய‌ர் ஆய்வு தூய்மையாக வைத்துக்‌ கொள்ள பொதுமக்களுக்கு வேண்டுகோள்‌!

கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலக கூட்டரங்கில்‌ திடக்கழிவு மேலாண்மை மற்றும்‌ வளர்ச்சிப்‌ பணிகள்‌ குறித்து அனைத்து மண்டல அலுவலர்களுடனான ஆய்வுக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப. அவர்கள்‌ தலைமையில்‌ இன்று நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலக கூட்டரங்கில்‌ திடக்கழிவு மேலாண்மை மற்றும்‌ வளர்ச்சிப்‌ பணிகள்‌ குறித்து அனைத்து மண்டல அலுவலர்களுடனான ஆய்வுக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப. அவர்கள்‌ தலைமையில்‌ இன்று நடைபெற்றது.

இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது:

கோவை மாநகராட்சியில்‌ அனைத்து மண்டலங்களிலும்‌ உள்ள அனைத்து தெருக்களிலும்‌ தூய்மைப்‌ பணியாளர்கள்‌ வீடு வீடாகச்‌ சென்று மக்கும்‌ குப்பை, மக்காத குப்பைகளை சேகரித்து தள்ளுவண்டி மற்றும்‌ வாகனங்கள்‌ மூலம்‌ எடுத்துச்‌ செல்லப்பட்டு கனரக வாகனங்கள்‌ மூலம்‌ குப்பைக்‌ கிடங்கிற்கு கொண்டு சென்று அங்கு தரம்‌ பிரிக்கப்பட்ட மக்கும்‌ குப்பைகள்‌ கொண்டு நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கப்பட்டு வருகிறது.

தூய்மைப்‌ பணியாளர்கள்‌ வீடுகள்‌ தோறும்‌ குப்பைகள்‌ பெறப்படும்போது மக்கும்‌ குப்பைகள்‌, மக்காத குப்பைகளை தனித்தனியே பெறப்பட வேண்டும்‌. மழைநீர்‌ மற்றும்‌ கழிவுநீர் செல்லும்‌ கால்வாய்களை தூய்மைப்படுத்திட வேண்டும்‌. சாலைகளை தூய்மைப்படுத்த வேண்டும்‌. வீடுகளில்‌ நீர்‌ தேங்கா வண்ணம்‌ பாதுகாத்து கொசுக்கள்‌ உற்பத்தியாவதை தடுத்திட வேண்டும்‌. தூய்மைப்‌ பணியாளா்கள்‌ மூலம்‌ கொசு மருந்துகள்‌ தெளிக்கப்பட வேண்டும்‌. இறைச்சி மற்றும்‌ கோழிக்கழிவுகளை தனியாக சேகரிக்கவும்‌, குப்பைகளை சாலைகளில்‌ கொட்ட வேண்டாம்‌ என அவ்விடங்களில்‌ விளம்பர பலகைகள்‌ வைக்க வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

மேலும், உணவகங்கள்‌ குப்பைகளை சாலைகளில்‌ கொட்ட வேண்டாம்‌ என அறிவுறுத்த வேண்டும்‌. பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்‌. குடிநீர் இணைப்பு பெற அனுமதி இல்லாமல்‌ நிலத்தை தோண்டக்‌ கூடாது. பழுதடைந்த கட்டிடங்களை கண்டறிந்து அவற்றிற்கு நோட்டீஸ்‌ வழங்க வேண்டும்‌. கூடுதலாக கட்டப்பட்டு வரும்‌ குடிநீர் தொட்டிகளின்‌ பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்‌. தூய்மையான மாநகராட்சியாக திகழ பொதுமக்கள்‌ அனைவரும்‌ முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்தார்.



இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி, மாநகரப்பொறியாளா்‌ ஆ.லட்சுமணன்‌, மண்டல உதவி ஆணையர்கள்‌

செந்தல்குமார்‌ ரத்தினம்‌ (வடக்கு), தி.ரா.ரவி (தெற்கு), அ.ஜெ.செந்தில்‌அரசன்‌ (மேற்கு), எம்‌.முருகன்‌(கிழக்கு), செயற்பொறியாளா்‌ ஞானவேல்‌, உதவி நிர்வாக பொறியாளர்கள்‌, உதவி பொறியாளா்கள்‌, அனைத்து மண்டல சுகாதார அலுவலா்கள்‌ மற்றும்‌ தொடர்புடைய அலுவலா்கள்‌

கலந்து கொண்டனா்‌.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...