நீலகிரி: கோத்தகிரியில் தேயிலை விவசாயிகளிடம் இருந்து கடந்த 10 நாட்களாக பச்சை தேயிலையினை கொள்முதல் செய்யாததை கண்டித்து நாக்குபெட்டா விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோத்தகிரி பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட தேயிலை தொழிற்சாலைகள் விவசாயிகளிடம் இருந்து பசுந்தேயிலை கொள்முதல் செய்வதை நிறுத்தியுள்ளன. பச்சை தேயிலைக்கு ஒரு கிலோவிற்கு 30 ரூபாய் 03 பைசா வழங்க தேயிலை வாரியம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், சிலர் வழங்கும் தரமில்லாத தேயிலைக்கு இந்த விலை வழங்க முடியாததால் தேயிலை தொழிற்சாலைகள் பச்சை தேயிலையினை வாங்க மறுப்பு தெரிவித்தன.

இதன் காரணமாக தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, இதில் தேயிலை வாரியம் உடனடியாக தலையிட்டு பச்சை தேயிலையினை கொள்முதல் செய்ய தொழிற்சாலைகளை வலியுறுத்த வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
மேலும், விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.