கோவை: கோவையில் கொரோனா தொற்றுக்கு வழங்கப்படும் நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் தொகுப்பு விநியோகத்தை அதிமுகவினர் மூலம் விநியோகிக்காமல் நியாய விலைக்கடை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட வேண்டும் என நா.கார்த்திக் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.
கோவை: கோவையில் சுகாதார துறை சார்பில் கூட்டுறவு துறை மூலமாக நியாய விலைக்கடைகளில் கொரோனா தொற்று தடுப்புக்கு வழங்கப்படும் நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் தொகுப்பு விநியோகத்தை அதிமுகவினர் மூலம் விநியோகிக்காமல் நியாய விலைக்கடை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட வேண்டும் என நா.கார்த்திக் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
கோவையில் தற்பொழுது கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இது சம்பந்தமாக கோவையில் சுகாதாரத்துறை சார்பில் கூட்டுறவு துறை மூலமாக, அனைத்து நியாய விலைக்கடைகளிலும், கொரோனா தொற்று தடுப்புக்கு நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது.
தற்பொழுது கோவை மாவட்டம் முழுவதும், அதிமுகவினர் தங்கள் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு சென்று, இந்த தொகுப்பு மாத்திரைகள் விநியோகத்தை, சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடை அலுவலர்கள் மூலம் வழங்காமல், சுகாதார துறை சார்பில் கூட்டுறவு துறை மூலமாக வழங்கப்பட்ட மாத்திரைகளை அதிமுகவினரே தங்கள் சொந்த பணத்தில் வழங்குவது போல வழங்கி நாடகமாடி வருகின்றனர்.
எந்தெந்த நடவடிக்கைகளில் அரசியல் செய்வது என்பதெல்லாம் இல்லாமல், இந்த மருந்து மாத்திரைகள் விநியோகத்தில் கூட, அதிமுக சார்பில் உள்ளவர்களை வைத்து செயல்படுத்தி, இந்த பேரிடர் காலத்திலும், ஆளும் அ.தி.மு.க அரசியல் செய்கிறது. இந்த செயலை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
மக்களுக்கு நிவாரண உதவியாக அரசு கொடுப்பது, மக்களின் வரிப்பணம். இது ஏதோ அ.தி.மு.க.வினர், ஓட்டு வாங்க ஓட்டுக்கு பணம் கொடுத்தது போல் களத்தில் இறங்கி, சுகாதாரத்துறை சார்பில் கூட்டுறவு துறை மூலமாக வழங்கப்பட்ட மாத்திரைகளை மக்களுக்கு கொடுத்து வருகின்றனர்.
கோவையில் உள்ள கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், கொரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சை பெறக்கூட முடியாமல் அல்லாடி வருகின்றனர். இதற்கெல்லாம் நடவடிக்கை எடுத்து உதவ முடியாத, கையாலாகாத அதிமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளை, மக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர். விரைவில் மக்கள் அதிமுக அரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.
ஆகவே, கோவையில் சுகாதார துறை சார்பில் கூட்டுறவு துறை மூலமாக நியாய விலைக்கடைகளில் கொரோனா தொற்று தடுப்புக்கு வழங்கப்படும் மாத்திரைகள் விநியோகம், ஆளுங்கட்சியான அதிமுகவினர் மூலமாக விநியோகிக்காமல், நியாய விலைக்கடை அலுவலர்கள் மூலம் விநியோகிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.