கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு சிக்கலான பிரசவம் பார்த்து கோவை இ.எஸ்.ஐ. மருத்துவர்கள் சாதனை..!

கோவை: திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 36 வயது கர்ப்பிணி பெண் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



கோவை: திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 36 வயது கர்ப்பிணி பெண் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அங்கு மேற்கொள்ளப்பட்ட, ஸ்கேனில் கர்ப்பப்பையில் 25×27 செண்டி மீட்டர் அளவில் பெரிய கட்டி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, குழந்தையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

இது குறித்து இ.எஸ்.ஐ. மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், "கர்ப்பப்பையில் இது போன்ற கட்டிகள் இருக்கும் போது கரு உருவாகாது. ஆனால், இந்த பெண்ணுக்கு கரு உருவாகி, குழந்தையும் ஆரோக்கியமாக வளர்ந்துள்ளது. இது போன்ற கட்டியால், பிரசவ நேரத்தில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது."

"இந்த நிலையில், குழந்தையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மகப்பேறு மருத்துவர், கீதா தலைமையில் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு, குழந்தை பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டது. குழந்தை 2.8 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருந்தது. இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்துள்ளனர்," என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...