மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ கே.சி.கருணாகரன் மறைவு - மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்க முடிவு!

கோவை: மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.சி.கருணாகரன் மறைவையடுத்து கோவை மாவட்டத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்க சிபிஎம் கோவை மாவட்டக்குழு அறிவித்துள்ளது.


கோவை: மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.சி.கருணாகரன் மறைவையடுத்து கோவை மாவட்டத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்க சிபிஎம் கோவை மாவட்டக்குழு அறிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினரும், கட்சியின் கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும், சிங்காநல்லூர் சட்ட பேரவை முன்னாள் உறுப்பினருமான கே.சி.கருணாகரன் வெள்ளியன்று இரவு காலமானார்.



முன்னதாக உப்பிலியபாளையம் இல்லத்தில் அவரது குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.



இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மதிமுக நிர்வாகி தேவசேனாதிபதி, சிஐடியு மாவட்ட தலைவர்கள் சி.பத்மநாபன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.வேலுசாமி, மூத்த தோழர்கள் யு.கே.வெள்ளிங்கிரி, என்.வி.தாமோதரன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், ஆர்.பத்ரி, சிபிஎம் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், எம்.கண்ணன், ஏ.ராதிகா, தீக்கதிர் கோவை பதிப்பு மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம், பொருப்பாசிரியர் ஏ.ஆர்.ராஜா மற்றும் ஊழியர்கள் மற்றும் சர்வ கட்சி தலைவர்கள், மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள். தொழிற்சங்க தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.



இதனையடுத்து, பாப்பநாயக்கன் பாளையம் மின்மயானம் வரை இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

முன்னதாக நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் திமுக கோவை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையாகவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன், மாவட்ட நிர்வாகி நந்தகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், சிபிஎம் ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.துரைராஜ், ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் கோவை ரவிக்குமார், திராவிட தமிழர் கட்சியின் வெண்மணி, திராவிடர் கழகத்தின் தலைவர் நேருதாஸ் ஆகியோர் பங்கேற்று இரங்கல் உரையாற்றினர்.

மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு

இதனிடையே, கே.சி.கருணாகரன் மறைவையொட்டி கோவை மாவட்டத்தில் மூன்று நாட்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கொடியை அரை கம்பத்தில் இறக்குவது என்றும், கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் மூன்று நாட்கள் ஒத்திவைப்பது என கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...