கோவை: கோவை கணுவாய் அருகே உடலில் தீ பற்ற வைத்தபடியே மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கணுவாய் டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த கார்த்திக்(26) கட்டிட தொழிலாளி. இவரது அண்ணன் தனது மனைவியான பிரியாவை விட்டு பிரிந்து சென்ற நிலையில், அண்ணியுடன் வசித்து வந்தார். கார்த்திக்கு குடிப்பழக்கம் உள்ள காரணமாக கார்த்திக்-பிரியா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அவரது அண்ணி பிரியா வீட்டு வாடகைக்கு வைத்திருந்த பணத்தில் குடித்து விட்டு வந்துள்ளாய், நான் எனது அம்மா வீட்டிற்கு செல்கிறேன் என கூறி உள்ளார்.
அப்போது, என்னை விட்டுச் சென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்த கார்த்திக், வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ பற்ற வைத்து கொண்டார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பிரியா அவரை காப்பாற்ற முயன்றார். ஆனால், தீ உடலில் மளமளவென பற்றி எறிய தொடங்கிய நிலையில், மொட்டை மாடி நோக்கி ஓடிய கார்த்திக் மாடியில் இருந்து கீழே குதித்து உள்ளார். இதில் பலத்த காயமடைந்த கார்த்திக்கை அவரது அண்ணி பிரியா மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து கார்த்திக்கை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
இதனிடையே, அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.