புதிய அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் சேர 15,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்!

திருப்பூர்: திருப்பூர்: தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள 3 அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் சேர 15,000 மாணவர்கள் விண்ணப்பித்து இருப்பதாகவும், ஒரு சில தினங்களில் கவுன்சிலிங் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என திருப்பூரில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.



திருப்பூர்: தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள 3 அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் சேர 15,000 மாணவர்கள் விண்ணப்பித்து இருப்பதாகவும், ஒரு சில தினங்களில் கவுன்சிலிங் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என திருப்பூரில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அனைத்து துறை அரசு அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இந்த ஆண்டு உடுமலை உட்பட மூன்று பகுதிகளில் புதிதாக கால்நடை மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளது கவும், 120 மாணவர்கள் படிக்க கூடிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கல்லூரிகளில் சேர்வதற்காக 15 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளதாகவும், இன்னும் ஒருசில தினங்களில் முறையாக கவுன்சிலிங் துவங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

மேலும், சேலம் தலைவாசலில் 1,200 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் கால்நடை ஆராய்ச்சி மைய பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த அவர், திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் தினந்தோறும் 3 ஆயிரம் வரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 100 முதல் 150 வரை பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வருவதாகவும், தாலுகா வாரியாக சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், திருப்பூர் மாவட்டம் அழகுமலையில் விவசாயிகளால் துவங்கப்பட உள்ள கால்நடை சந்தை குறித்து முறையான ஆய்வு செய்து நிபந்தனைகளுக்கு பிறகு அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...