கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

அதே சமயம், மக்கள் அலட்சியம் காட்டினால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும், என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த வாரத்தில் தினமும் 650க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை என்பது 350 முதல் 500-ஆக குறைந்துள்ளது. மாவட்டத்தில் கடந்த 9ம் தேதி 397 பேருக்கும், 10ம் தேதி 448 பேருக்கு மட்டுமே, கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, தெரிவித்த சுகாதாரத்துறையினர், மக்கள் அலட்சியமாக இருந்தால் மீண்டும் பாதிப்பு அதிகரிக்கக்கூடும், என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இது குறித்து, சுகாதாரத் துறையினர் கூறுகையில், "கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பினால் கழுவ வேண்டும். கடைவீதிகள், உணவகங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அரசு கூறும் அனைத்து நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்."
மேலும், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதில், இவிதமான அலட்சியமும் காட்ட கூடாது, என்றார்.
கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதற்காக, 20 பறக்கும் படைகள் குழு அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும் படை குழுக்கள் அரசின் விதிமுறைகளை மீறும் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவற்றிற்கு அபராதங்கள் விதிக்கின்றன.
மண்டல வாரிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், மக்கள் சிற்று நிம்மதியடைந்து வருகின்றனர்.