திருப்பூர்: திருப்பூரில் சேறு கலந்த குடிநீர் விநியோகிப்பதை கண்டித்து பொதுமக்கள் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் இடுவம்பாளையம் அருகே 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும் நிலையில், குடிநீரில் சேறு கலந்து வந்துள்ளதால் குடிநீரை பயன்படுத்த முடியவில்லை எனவும், பலமுறை வடிகட்டினாலும் பயன்படுத்த முடியாத அளவிற்கு மண் கலந்து வந்துள்ளதாக கூறி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இப்பகுதியில் உள்ள அனைவரும் பனியன் நிறுவனங்களில் தொழிலாளர்களாக பணியாற்றி வரும் சூழலில் காசு கொடுத்து குடிநீர் வாங்க முடியாது எனவும் குழந்தைகள் இப்பகுதியில் அதிக அளவில் உள்ளதால் இது போன்ற சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்தால் நோய்த் தொற்றும் அபாயம் உள்ளதாகவும் முறையான குடிநீர் வழங்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆண்டிப்பாளையம் 4வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.