கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் அரசின் கொரோனா விதிமீறல் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து இதுவரை ரூ.35 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
கோவை: கோவையில் கடந்த மாதம் 9ம் தேதி நாட்டு வெடிகுண்டால் நாக்கு மற்றும் தாடை பகுதி சேதமடைந்து உயிரிழந்த மக்னா யானை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டால் பாதிக்கப்பட்டு நாக்கு மற்றும் தாடை சேதமடைந்த மக்னா யானை உணவு உண்ண முடியாமல் சுற்றி வந்தது. யானையை பிடித்து உரிய சிகிச்சை அளிக்குமாறு தமிழக வனத்துறைக்கு உத்தரவிடக் கோரி, கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில், ஏற்கெனவே குறிப்பிட்டபடி பாதிப்பு அடைந்த யானைக்கும் மீண்டும் பாதிப்பு ஏற்படும் படி செய்த வனத்துறையின் செயல் கண்டிக்கத்தக்கது.
பாதிப்பு அடைந்த யானை நீண்ட நாட்களுக்கு உயிரோடு இருப்பதற்கு வாய்ப்பு இருக்காது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்த பின்னரும், பட்டாசு வெடித்து யானை விரட்டியதற்காக வனத்துறைக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தது.
இதை விசாரிக்க நீதிபதி சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வுக்கு வந்தது. வனத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு பிளிடர் விஜய் பிரசாந்த் காயம்பட்ட யானை அதிரடி முகாமில் உள்ள சிலிண்டர் வைத்துள்ள பகுதிக்கு சென்றதால் மட்டுமே விரட்ட வேண்டியது இருந்தது.
மேலும் காயம் அடைந்த யானை ஊர்புறத்தில் உள்ள வீடுகளுக்குள் செல்வது, விவசாய நிலத்தை சேதப்படுத்தி வரும் நிலையிலும் கூட வனத்துறை வீரர்கள் தன் உயிரை கொடுத்து பணிபுரிகிறார்கள். வாய்ப்பகுதி சேதமடைந்த நிலையிலும் கூட வனத்துறை சார்பில் உணவு பொருட்கள் வைக்கப்பட்டது. ஆனால், இந்த யானை கேரள- தமிழக எல்லையை வழித்தடமாக பயன்படுத்துவதால் கேரள வனத்துறைக்கும் செய்தி அனுப்பி இருந்த நிலையில், அட்டப்பாடி, சோலையூர் சாலையில் உள்ள மரப்பாலம் அருகே உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து நீதிபதிகள், வனங்களில் இருந்து வரும் யானைகளை விரட்ட எந்த மாதிரியான முயற்சிகள் (அ) வழிகாட்டும் நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், இறந்த மக்னா யானை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வனத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் நவம்பர் மாதம் 6ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.